×

இலங்கையில் மாஜி அமைச்சர் ரஜிதா கைது

கொழும்பு: இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சே. இவர் அதிபராக இருந்த காலத்தில் பிரபலமான வெள்ளை வேன் கடத்தல் சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் 10ம் தேதி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும்,  எதிர்க்கட்சி எம்பி.யுமான ரஜிதா செனரத்னே பேட்டியளித்தார். இவருடன் வேன் டிரைவர் உள்பட இருவர் இருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய சிஐடி அதிகாரிகள் இந்த பேட்டியின்போது உடனிருந்த 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரஜிதா கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவரை சிஐடி அதிகாரிகள் கைது ெசய்தனர். கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிகா ரனவாகா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Rajitha ,Sri Lanka , Rajitha arrested , Sri Lanka
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...